www.garudabazaar.com

‘ஈரம்’ பட இயக்குநர் & நடிகர் ஆதி இணையும் அடுத்த ஹாரர் படம்.. இசை தமன்.. டைட்டில் இதுதான்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை (டிசம்பர் 15, 2022 ) :  Aalpha Frames  இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

Eeram Arivazhagan and Aadhi new horror movie titled Sabdham

Also Read | "சந்தோசத்தின் குவியலை தரப்போகும்".. அட்லி - பிரியா தம்பதி சொன்ன குட் நியூஸ்.. !

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய  தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார். ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Eeram Arivazhagan and Aadhi new horror movie titled Sabdham

ஈரம் படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி  வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது. Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்கும் “சப்தம்” படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குநர் அறிவழகன். ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும்  ஹாரர் திரில்லராக  இப்படம் உருவாகவுள்ளது.

Eeram Arivazhagan and Aadhi new horror movie titled Sabdham

சப்தம் படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள, டிசம்பர் 14, 2022 அன்று இனிதே நடைபெற்றது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Eeram Arivazhagan and Aadhi new horror movie titled Sabdham

Also Read | Avatar 2 FDFS : ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படம்.. எப்படி இருக்கு..? ரசிகர்கள் சொல்வது என்ன? Avatar: The Way of Water

தொடர்புடைய இணைப்புகள்

Eeram Arivazhagan and Aadhi new horror movie titled Sabdham

People looking for online information on Aadhi, Eeram Arivazhagan, Horror movie, Sabdham will find this news story useful.