Valimai BWE
www.garudabazaar.com

"அப்பா யார்"னு கேட்ட கண்ணம்மா மகள்.. கோவத்தில் Bigg Boss ராஜூ ஃபோட்டோவை காட்டுன பாரதி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி, 25, பிப்ரவரி 2022: விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் தன் தந்தை யாரென கேட்டு அழுத கண்ணம்மாவின் மகள் லக்‌ஷ்மியிடம், பாரதி ராஜூவின் போட்டோவை காட்டியுள்ளார். 

Bharathi shows Bigg Boss Raju pic to Kannamma daughter

பாரதி கண்ணம்மா

விஜய் டிவி சீரியல்களுள் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் இவர்களின் குழந்தைகளான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாகவும், குழந்தை லக்‌ஷ்மி கண்ணம்மாவிடம் நேரடி மகளாகவும் வளர்கின்றனர்,

இரு குழந்தைகள் 

ஆனால், இதில் ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் ரிவீல் செய்த கண்ணம்மா, “குழந்தை ஹேமா எனது 2வது குழந்தை தான். அதாவது நம் குழந்தை தான்” என சொல்ல, அதிர்ச்சி அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதி, சற்றும் அதிராமல், கண்ணம்மாவிட ம், “நெனைச்சேன், என்னையும் என் குழந்தை ஹேமாவையும் பிரிக்க நீ இந்த திட்டத்தை போட்டிருப்பாய் என எனக்கு எப்போதோ தெரியும், அதுவும் உனக்கு பிரசவம் பார்த்த என்னிடமே இப்படி பொய் சொல்கிறாயே?” என கூறியிருந்தார்.

மேலும், ஹேமாவை தன் அம்மாவே ஒரு ஆசிரமத்தில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து தன்னிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னதாகவும், அவர் பொய் கூறியிருந்தால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் மன்னிப்பே கிடையாது என பாரதி கூற, பயந்து போன கண்ணம்மா, தன் மாமியாருக்காக பாரதியிடம் மேற்கொண்டு பேசாமல் விட்டுவிட்டார்.

கண்ணம்மா பிறந்த நாள் 

 

அதன் பின்னர் தன் மாமியாரை வறுத்தெடுத்த கண்ணம்மா, தன் பிறந்த நாளை கொண்டாட போனார். அந்த பிறந்த நாள் விழாவில்தான் இவ்வளவும் நடந்தது. அப்போது கண்ணம்மா கேக் வெட்டும் முன், ஹேமா குறுக்கிட்டு, “சமையல் அம்மா, உங்க பொண்ணு லக்‌ஷ்மிக்கு அவளோட அப்பா யார்னு சொல்றதா சொல்லி இருந்தீங்கள்ல? அதை சொல்லிட்டு அப்புறம் கேக் வெட்டுங்க” என சொல்ல, கண்ணம்மா திகைத்து போய் விட்டார்.

உண்மையை உடைத்த கண்ணம்மா 

பாரதியும் கண்ணம்மாவிடம் ஏற்கனவே கூறியிருந்தபடி, லக்‌ஷ்மியிடம் பாரதி தான் அப்பா என சொல்லிவிட்டால், லக்‌ஷ்மியிடம் தன் பங்குக்கு தான் அறிந்த உண்மையை சொல்வது என முடிவெடுத்திருந்தார். அதன்படி, லக்‌ஷ்மியிடம் பேசிய கண்ணம்மா, “நீ வாய் நிறைய அங்கிள் என அழைக்கும் இந்த பாரதி தான், நீ வாய் நிறைய அப்பா என அழைக்கத் துடிக்கும் உன் அப்பா!” என போட்டு உடைத்துவிட்டார்.

பாரதிக்கு வந்த கோபம் 

இதனால் கடுப்பான பாரதி, தான் நம்பிக் கொண்டிருந்த ஒரு தவறான விசயத்தை, குழந்தை லக்‌ஷ்மியிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆம், பாரதியை பொறுத்தவரை குழந்தை லக்‌ஷ்மி, கண்ணம்மாவுக்கும் வருண் என்கிற நபருக்கும் பிறந்த குழந்தை. வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதி இவ்வாறு நம்பிக் கொண்டிருக்க, அதையே குழந்தை லக்‌ஷ்மியிடமும் பாரதி கூறிவிட்டார்.

ராஜூ ஃபோட்டோவை காட்டிய பாரதி

அத்தனை பேரும் தடுத்தும் கேட்காத பாரதி, குழந்தை லக்‌ஷ்மியிடம், வருண் என்கிற நபரின் புகைப்படத்தை செல்போனில் காட்டி, ‘இவர் தான் உன் அப்பா’ என சொல்வது போல் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது அந்த வருண் வேறு யாருமில்ல. நம் பிக்பாஸ் 5வது சீசன் டைட்டில் வின்னர் ராஜூ தான். அவர் தான் பாரதி கண்ணம்மாவில் வருண் என்கிற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வந்தார்.

உனக்கு எல்லாமே கண்ணம்மா தான் 

அவரையே தன் மனைவி கண்ணம்மாவுடன் சேர்த்து சந்தேகப்படுகிறார் பாரதி. அந்த சந்தேகம் 9 வருஷம் ஆகியும் அதிகமாகிறதே தவிர, குறையவில்லை. இந்நிலையில் தான் லக்‌ஷ்மியிடம் வருணின் ஃபோட்டோவை காட்டும் பாரதி, பின்னர் லக்‌ஷ்மியை சமாதானப்படுத்தி, “உன் அம்மா, அப்பா எல்லாமே இந்த கண்ணம்மா தான்,  உன் அம்மா தான்” என சொல்லி நெகிழவும் வைக்கிறார். ல்க்‌ஷ்மி ஓடிச்சென்று கண்ணம்மாவை கட்டிப்பிடிக்கிறார்.

அதாவது கண்ணம்மா ஒரு உண்மையை ரிவீல் செய்ய, அதற்கு போட்டியாக பாரதி தான் நம்பிக் கொண்டிருந்த விஷயத்தையும் உண்மை என நினைத்து ரிவீல் செய்துள்ளார். தொடர்ந்து சீரியல் போகும் போக்கை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read : "நீ தேவதையா?.. சாமரம் வீசும் தாசியா?".. தாமரையிடம் அபிராமி பரபரப்பு கேள்வி.. BBUltimate

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi shows Bigg Boss Raju pic to Kannamma daughter

People looking for online information on Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode will find this news story useful.