www.garudabazaar.com

"ஐக்கி ஒரு விநோத பிறவி".. "இசைவாணி அடிக்கடி அத பத்தி பேசுறாங்க".. சீரியஸாக பேசும் அபிஷேக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தொடக்கத்தில் வருண், சிபி மற்றும் அபினய் உள்ளிட்டோர் பற்றிய தன் பார்வையை ஒவ்வொரு வரிகளில் அபிஷேக் முன்வைத்திருந்தார். அதே எபிசோடில் தன்னை பற்றியும் தன் தாயாருக்கும் தனக்குமான உறவு பற்றியும் பேசி உருகி அழத் தொடங்கினார்.

abishek reviews about isaivani and iykki berry biggbosstamil5

அவரை அனைவரும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து இன்னொரு நிகழ்வில் கமல்ஹாசனிடம் பேசும்போது தனக்கு தன் அக்காவை போல பிரியங்கா இருப்பதாகக் கூறி பேசி நெகிழ்ந்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பேசியுள்ள அபிஷேக் ஒவ்வொரு பெண் போட்டியாளர்கள் குறித்தும் சற்றே விரிவாகவும் ஆழமாகவும் பேசியுள்ளார்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான ஆட்களில் யாரை வெளியேற்றுவது என்பது குறித்த நாமினேஷன் ப்ராசஸில், அபிஷேக் ராஜா தன் பங்குக்கு நாடியா மற்றும் அக்‌ஷரா ஆகிய 2 பேரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு நாமினேட் செய்திருந்தார்.

இந்நிலையில் பாவனி, நாடியா சாந்த் என பலரை பற்றியும் பேசிய அபிஷேக் ராஜா, ஐக்கி பற்றி குறிப்பிடும்போது, “ஐக்கி பெர்ரி வந்து.. பெருசா யாரும் அவங்களோட கனெக்ட் ஆக முடியாது... அவரை விநோத பிறவியாக பார்ப்பார்கள். அதற்குத்தான் வாய்ப்பிருக்கே தவிர, யாரும் அவருடன் அட்டாச் ஆக மாட்டார்கள்”  என்று பேசியுள்ளார்.

இதேபோல் கானா பாடகி இசைவாணி குறித்து பேசிய அபிஷேக், “மக்களின் பார்வையில் இசை எப்படினா.. அவங்களுக்குள்ள நிறைய சோகம் இருக்கு. ஆனால் அதை அடிக்கடி எடுத்துச் சொல்லுதோனு தோணும். சாதாரணமா ஒரு மேட்டர பேசுனா கூட எங்க வீட்ல ஃப்ரிட்ஜ் இல்ல.. அது இல்ல... இது இல்லனு பேசுகிறார்” என்று பேசியுள்ளார். இந்த காட்சி புரோமோவில் இடம் பெற்றுள்ளது. எனினும் நிகழ்ச்சியில் இடம் பெறவில்லையே ஏன்? என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Also Read: "பாவனியை ஏன் யாருமே நாமினேட் பண்ல?.. இதுதான் காரணம்".. போட்டு உடைத்த அபிஷேக்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

abishek reviews about isaivani and iykki berry biggbosstamil5

People looking for online information on .BiggBossTamil5 PriyankaDeshpande RajuJeyamohan, Abishek, BiggBossTamil5, Isaivani, Iykki Berry will find this news story useful.