www.garudabazaar.com

'தலைவன் வேற ரகம்!'.. ஊரடங்கில் ஆரி செய்த நெகிழ்ச்சி காரியம்!!.. பரவும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களில் தம் நடிப்பை பதியவைத்த ஆரி, பின்னர் 'நாகேஷ் திரையரங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Aari donated food for people around girivalam viral pics

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-4 மூலம் தமிழ் ரசிகர்களின் இல்லங்களுக்கே சென்று தனக்கே உரிய தன் இயல்பால் அனைவரின் இதயத்திலும் இடம் பெற்றார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரானதும் ஆரிக்கும் இன்னும் ரசிகர்கள் ஏராளமாகினார்.

இந்நிலையில் பல சமூகம் சார்ந்த விஷயங்களில் எப்போதும் தம் பங்களிப்பை செலுத்தி வரும் இளம் நடிகர் ஆரி அர்ஜுனன், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

நடிகர் ஆரி அர்ஜுனனின் ’மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை சார்பாக, திருவண்ணாமலை கிரிவலப் பாதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 பேருக்கு அந்த அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் ஆரியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டிருக்கிறது.

நடிகர் ஆரி, தற்போது ஒரு காப் ஸ்டோரி உட்பட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ஆரி நடிப்பில், ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படத்தின் டீசரும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: நடிகர் கார்த்தி கோவிட் முதல் டோஸை போட்டுக்கொண்டார்! தீயாய் பரவும் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Aari donated food for people around girivalam viral pics

People looking for online information on Aari, BiggBossTamil4 will find this news story useful.