www.garudabazaar.com

போடு வெடிய!! ஓடிடியில் ஒளிபரப்பாகும் சிம்புவின் சமீபத்திய திரைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

simbu popular movie to stream on OTT சிம்பு படம் ஓடிடி

நீண்ட நாட்கள் கழித்து சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பாராதவிதமாக ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாகவே அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் சிம்பு தன் உடல் எடையைக் குறைத்து இன்னும் ஸ்லிம்மான தோற்றத்தில் தோன்றினார். இந்த படத்துக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

இதனை அடுத்து சிம்புவின் மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நீண்ட நாட்களாகவே கொரோனா சூழலில் நடந்த துக்க சம்பவங்களால் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் டிஸ்னி+ஹாட் ஸ்டார் விஐபியில் ஒளிபரப்பாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பிரபல ஓடிடியில் சமுத்திரகனி, யோகிபாபு நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெள்ளை யானை!

தொடர்புடைய இணைப்புகள்

simbu popular movie to stream on OTT சிம்பு படம் ஓடிடி

People looking for online information on Eeswaran, Silambarasan TR will find this news story useful.