www.garudabazaar.com

ஸ்ருதிஹாசனிடம் போன் நம்பர் கேட்டு சேட்டை செய்த ரசிகர்! செமயான பதிலடி கொடுத்த ஸ்ருதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஊரடங்கு காலத்தை சமூக வலை தளங்களில் செலவு செய்த நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ சூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்ந்து வந்தார். 

a fan who asked for shruthi haasan phone number

ஸ்ருதிஹாசன் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு சமீபத்தில் ட்விட்டரில் பதிலளித்தார். "சரி சரி. என்னிடம் ஏதாவது கேளுங்கள்" என்று ட்வீட் மூலம் அறிவிக்க ரசிகர்கள் கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர். அவரது புத்தகங்கள் மற்றும் இசை விருப்பங்கள் முதல் திரைப்படங்கள் வரை, கிட்டத்தட்ட எல்லாவற்றையும் கேள்வியாக கேட்டனர்.

a fan who asked for shruthi haasan phone number

ஒரு ரசிகர் இந்த கேள்வியை கேட்டார், "நீங்கள் எந்த பாடலை 100 முறை திரும்ப திரும்ப கேட்க முடியும்?" அதற்கு ஸ்ருதி,"Don't fear the reaper - Blue Oyster Cult." என்று கூறினார்.

தனக்கு பிடித்த எழுத்தாளரைப் பற்றி கேட்டபோது, ​​"எனக்கு மிகவும் பிடித்தமானவர் நீல் கைமான்" என்று ஸ்ருதி ஹாசன் பதிலளித்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் மைக்கேல் பி ஜோர்டான் தனக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

a fan who asked for shruthi haasan phone number

ஒரு தேவையற்ற கேள்வி வந்தபோது,  ரசிகரை வசைபாடாமல் ஆனால் அதே வேளை அருமையான மற்றும் நகைச்சுவையான பதிலைக் கொடுத்தார் ஸ்ருதி ஹாசன். தனது தொலைபேசி எண்ணைக் கேட்ட ஒரு ரசிகருக்குப் பதிலளித்த ஸ்ருதி, ஒரு தொலைபேசி எண்ணாக "100" என்று பதில் கூறினார்.

ஸ்ருதி ஹாசன் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார்.

a fan who asked for shruthi haasan phone number

இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

a fan who asked for shruthi haasan phone number

People looking for online information on Shruthi Haasan will find this news story useful.