Reliable Software
www.garudabazaar.com

"தளபதி பத்தி ஒரு வார்த்தையில".. "அதுக்கு அப்பா தான் காரணம்!".. ஸ்ருதி பதில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகையும் நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

Shruthi haasan answering fans one word about thalapathy vijay

அதில் எப்போது மீண்டும் இசையமைப்பீர்கள் என்று கேட்டதற்கு அந்த பணிகள் நடப்பதாகவும், விரைவில் இயக்குநராவீர்களா? என்று ரசிகர்கள் கேட்டதற்கு ஆம் என்றும் பதிலளித்திருந்தார்.

பின்னர் ஸ்ருதிஹாசன் என்கிற பெயரில் இருக்கும் ஹாசன் என்கிற வார்த்தையில் எதற்காக 2 A உள்ளது என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு,  “அதற்கு என் தந்தை தான் காரணம்!” என்றும் பதிலளித்திருந்தார.

இப்படி ஜாலியாக ரசிகர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில் அளித்து வந்த நிலையில், அப்போது ரசிகர் ஒருவர் இப்படி உடனுக்குடன் ரிப்ளை செய்கிறீர்களே? என் கேர்ள் ப்ரண்டும் உங்களைப் போல செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என கமெண்ட் போட,  அதற்கு “அது நீங்கள் அவரை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை பொருத்தது” என பதில் அளித்திருந்தார்.

அந்த வகையில், தளபதி விஜய் பற்றி சொல்லுங்கள் என்று அவருடைய ரசிகர்கள் கேட்டதற்கு ‘அமேசிங்’ என்று ஒற்றை  வார்த்தையில் பதிலளித்திருக்கிறார். இதனை கேட்டதும் தளபதி ரசிகர்கள் மிகவும் குஷி ஆகி விட்டனர். நடிகர் விஜயுடன் இணைந்து புலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கிற்காக தளபதி விஜய் ஜார்ஜியாவில் மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். பூஹா ஹெக்டே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

ALSO READ: 'பிரம்மாண்ட படத்தின்' ரீமேக்கில் 'ஷங்கர்'.. யார் ஹீரோ தெரியுமா? .. அவரே அறிவித்த #பரபரப்பு தகவல்.

தொடர்புடைய இணைப்புகள்

Shruthi haasan answering fans one word about thalapathy vijay

People looking for online information on Shruthi Haasan, Thalapathy, Thalapathy65, ThalapathyVijay, Trending will find this news story useful.