ஸ்ருதி ஹாசனை 5 விதமான தோற்றங்களில் தீட்டிய ஓவியர் – ’நீங்க உண்மைலயே Talented’ நெகிழ்ந்த ஸ்ருதி!
முகப்பு > சினிமா செய்திகள்கமல் இயக்கி நடித்த ’ஹேராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். அதன் பிறகு நெடுங்காலம் சினிமா வெளிச்சம் படாமல் இருந்த அவர் இசையிலும் பாடுவதிலும் ஈடுபாடு காட்டினார்.

2009ம் ஆண்டு ஹிந்தி படமான ’லக்’ அவரை மீண்டும் நடிகை அவதாரம் எடுக்க வைத்தது. அதே ஆண்டு அவர் கமல் நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்கு இசையும் அமைத்திருந்தார். அதன் பிறகு நடிக்கும் வாய்ப்புகள் குவிய தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று ஏராளமான படங்களை ஒருகை பார்த்துவிட்டு 2018ம் ஆண்டு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டார்.
தற்போது விஜய் சேதுபதியின் ’லாபம்’, தெலுங்கில் ’க்ராக்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள அவரின் இன்ஸ்டாக்ராம் கணக்கை ஃபாலோ செய்ய தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்தில் ஸ்டேட்டஸ் போட்டுள்ள அவர், ஒருவர் தனக்கு அனுப்பி வைத்த ஓவியம் குறித்து பேசியுள்ளார். சிறுவயது முதல் தற்போதுள்ளது வரை 5 விதமான தோற்றத்தில் ஸ்ருதி ஹாசனை அந்த ஓவியர் தீட்டியுள்ளார். இது மிகவும் அற்புதமாக உள்ளதாகவும். தாங்கள் உண்மையில் திறமைசாலி என்றும் ஸ்ருதி ஹாசன் அந்த ஓவியரை புகழ்ந்துள்ளார்.