96 ரீமேக் இசையமைப்பாளருக்கு திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக் - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்த '96' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. பிரேம் குமார் இயக்கிய இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசைக்கும் ஒரு பெரும் பங்குண்டு.

இந்த படம் கன்னடத்தில் கணேஷ் - பாவனா நடிப்பில் '99' என்ற பெயரிலும், தெலுங்கில் ஷர்வானந்த் - சமந்தா நடிப்பில் '96' என்ற பெயரிலும் ரீமேக்கானது. தெலுங்குக்கு தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தாவே இசையமைக்க, கன்னடத்தில் அர்ஜூன் ஜான்யா இசையமைத்திருந்தார்.
அது அவருக்கு 100வது படமாகும். இந்நிலையில் இசையமைப்பாளர் அர்ஜூன் ஜார்ன்யாவிற்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டததாகவும் உடனடியாக அவர் மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள், தற்போது அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனராம்.