ஒருநாள் முதல்வர் மாதிரி ஒருநாள் சேல்ஸ்மேன் - பார்த்திபன் எடுக்கும் வித்தியாசமான முயற்சி!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், ஒருநாள் சேல்ஸ்மேனாக இருப்பதை பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் பார்த்திபன். இவர் அண்மையில் இயக்கிய ஒத்த செருப்பு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தில் இவர் தனி ஒருவராக படம் முழுக்க நடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து இவர் இரவின் நிழல் என்கிற படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படம் முழுவதும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் பார்த்திபன் கோவையில் நடக்கும் ஒரு புத்தக கடை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதுகுறித்த தனது பதிவில், ' ப்ரூக் ஃபீல்ட்ஸ் மாலில் இருக்கும் ஒடிஸ்ஸி புத்தக கடையில் ஒருநாள் சேல்ஸ்மேனாக நான். புத்தகம், கையெழுத்து, புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் உங்களை சந்திக்கவும் ஆனந்தமாய் காத்திருப்பேன்' என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பார்த்திபனின் கிறுக்கல்கள், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனையாகின்றன.
Tomorrow-27th feb/10.59 am Coimbatore- Brookfield mall -odyssey-யில் salesman ஆக நான்!
புத்தகம்/கையெழுத்து/புகைப்படம்
காத்திருப்பேன்..உங்களை ஆனந்த’மாய் சந்திக்க! pic.twitter.com/SvaM3EmM7c
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 26, 2020