‘8 தோட்டாக்கள்’ படத்தை தயாரித்த வெற்றிவேல் சரவணா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜீவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘8 தோட்டாக்கள்’ நாயகன் வெற்றி நடிக்கும் இப்படத்தின் நாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், ரோஹினி, மைம் கோபி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாபு தமிழ் கதை எழுதியுள்ள இப்படத்தை வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் இப்படத்தை லைன் பிரொட்யூஸ் செய்கிறார். முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மனுஷனுக்கு வரக்கூடாத வியாதி என்ன தெரியுமா..?’ - ஜீவி டீசர் ரிலீஸ் வீடியோ