அமலா பால் பகிர்ந்த ஃபோட்டோ - 'ராட்சசன்' நியாபகங்களுடன் நடிகர் விஷ்ணுவிஷால் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அமலா பால் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த விஷ்ணு விஷால், 'ராட்சசன்' நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. உங்கள் வேலையில் நீங்கள் சிறப்பானவர். அதனால் தொடர்ந்து பணி செய்யுங்கள். சுதந்திரத்தை உணர்வீர்கள் என்று வாழ்த்துகள் தெரிவித்தார்.

விஷ்ணு விஷால் - அமலா பால் இணைந்து நடித்த 'ராட்சசன்' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் 'மோகன்தாஸ்' பட டைட்டில் அறிவிப்பு டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்க, விஷ்ணு விஷால் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார்.

Entertainment sub editor