www.garudabazaar.com

விஜய்யின் சச்சின் பார்ட்-2.. இயக்குநர் தகவல்.! - 'காஸ்ட்யூம்ஸ் முதல் காமெடி வரை - Making Secrets.'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சச்சின் படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன் திரைப்படம் உருவான விதம் குறித்து நம்மிடம் மனம் திறந்து பேசினார். 

விஜய்யின் சச்சின் பார்ட் 2 பற்றி சொல்லும் இயக்குநர் | Vijay's Sachein Movie Director John Mahendran Opens on Part 2

2005-ஆம் வருடம், சம்மருக்கு வெளியான திரைப்படம் சச்சின். விஜய் நடித்த இத்திரைப்படத்தை லெஜன்டரி இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் இயக்கினார். ஜெனிலியா, ரகுவரன், வடிவேலு, பிபாஷா பாசு உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்தார். 15 வருடங்கள் கழித்தும், சச்சின் திரைப்படத்தை விஜய் ரசிகர்களும், ஃபீல்குட் விரும்பிகளும் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் சச்சின் திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் ஜான் மகேந்திரன் நம்மிடம் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் சச்சின் படத்தின் பார்ட்-2 உருவாகும் வாய்ப்பு குறித்து பேசியபோது, ''கண்டிப்பாக அப்படி ஒரு படத்தில் விஜய்யை பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன். அது நான் இயக்கினாலோ, இல்லை வேறு யாரொருவர் இயக்கினாலோ சரி, மீண்டும் அவரை கூலான அந்த கதாபாத்திரத்தில் பார்க்க ஆசைப்படுகிறேன். அது நடந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும்'' என அவர் தெரிவித்தார். 

மேலும் படத்தில் விஜய்யின் காஸ்ட்யூம்கள் மற்றும் வடிவேலு - விஜய் உடனான காமெடி காட்சிகள், க்ளைமாக்ஸ் என ஜான் மகேந்திரன் பேசிய முழு வீடியோ இதோ.

விஜய்யின் சச்சின் பார்ட்-2.. இயக்குநர் தகவல்.! - 'காஸ்ட்யூம்ஸ் முதல் காமெடி வரை - MAKING SECRETS.' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் சச்சின் பார்ட் 2 பற்றி சொல்லும் இயக்குநர் | Vijay's Sachein Movie Director John Mahendran Opens on Part 2

People looking for online information on John mahendran, Sachein, Sachein Part 2, Vijay will find this news story useful.