www.garudabazaar.com

"ஏன்டா துப்பாக்கி படம் பண்ணோம்னு ரொம்ப வருத்தப்பட்டேன்!" - பிரபல நடிகை பளீச்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துப்பாக்கி, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த அக்‌ஷரா கௌடா செம ஜாலியாக நம்மிடம் உரையாடினார். 

துப்பாக்கி பட நடிகை பளீச் பேட்டி | ajith's arambam and vijay's thuppaki actress akshara gowda interview

விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து பிரபலமானார் அக்‌ஷரா கௌடா. இதையடுத்து அஜித்தின் ஆரம்பம் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக இவர் ஆடிய ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் இரும்புகுதிரை, போகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இந்நிலையில் அக்‌ஷ்ரா கௌடா தனது திரைப் பயணத்தை பற்றி நம்மிடம் ஜாலியாக பேசினார். அப்போது அவர் தான் நடித்த கதாபாத்திரங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர், துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என தெரிவித்தார். காரணம், அந்த கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. மற்றபடி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் இவர்களுடன் வேலை செய்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக விஜய்யை கண்டு நான் மிரண்டு போனேன் எனவும் அவர் கூறினார். 

மேலும் அஜித்தின் ஆரம்பம் திரைப்படத்தில் அவருடனான சூப்பர் மெமரீஸ்களையும் அக்‌ஷரா நம்முடன் பகிர்ந்து கொண்டார். இதன் முழு வீடியோ இதோ. 

தொடர்புடைய இணைப்புகள்

துப்பாக்கி பட நடிகை பளீச் பேட்டி | ajith's arambam and vijay's thuppaki actress akshara gowda interview

People looking for online information on Ajith Kumar, Akshara Gowda, Arrambam, Thuppakki, Vijay will find this news story useful.