இந்தியன் 2 விபத்து - "எத்தனையோ விபத்துக்களை" ஆக்சிடென்ட் ஸ்பாட்டில் இருந்த கமல் உருக்கம்.
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்து குறித்து நடிகர் கமல் உருக்கமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தியன் 2-வின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று இந்தியன் 2 வின் படப்பிடிப்பில் க்ரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் பலியானார்கள். இதையடுத்து நடிகர் கமல் விபத்துக்கு பின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் 'மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட
அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2020