ஏப்ரல் 14 எல்லாருக்கும் தலைவர் தரிசனம் உண்டு..! ரஜினி படத்தின் செம அறிவிப்பு வெளியானது.
முகப்பு > சினிமா செய்திகள்ஏப்ரல் 14 அன்று ரஜினியின் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பாவது குறித்து அறிவிப்பு வெளியானது.

ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இத்திரைப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அதிரடி போலீஸ் வேடத்தில் ரஜினி கலக்கிய இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார்.
இந்நிலையில் தர்பார் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, தர்பார் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியுள்ள சன் டிவி வெளியிட்டுள்ளது. இதையடுத்து வரும் தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, மாலை 6.30 மணிக்கு தர்பார் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அப்போ ஏப்ரல் 14 உலகத்துக்கே நம்ம தலைவர் தரிசனம்தான்.!
அட்டகாசமா அசத்த வருகிறார் ஆதித்யா அருணாச்சலம். உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக,
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்..
தர்பார் | ஏப்ரல் 14 | 6.30 PM #SunTV #Darbar #DarbarOnSunTV pic.twitter.com/yBRZ1YpJ0p
— Sun TV (@SunTV) April 6, 2020