ஜாக்பாட்... டாக்டர் பட நடிகைக்கு அடுத்தடுத்து கிடைத்த பெரிய ஹீரோ பட வாய்ப்புகள்.. வைரல் தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியானது. பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் "டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் காலை 11மணிக்கு வெளியிட்டது லைகா நிறுவனம். இந்நிலையில் வைரலாகும் தகவல்  என்னவென்றால் டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகன் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.

டாக்டர் பட நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்பு

நடிகை பிரியங்கா மோகன் காட்டில் அடைமழை என்றே சொல்லலாம். காரணம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் சூர்யாவின் படத்திற்கு 'சூர்யா 40' என்று தற்சமயம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிப்பார் என்று இன்று தான் அறிவித்தனர். இந்நிலையில் வைரலாகி வரும் இந்த தகவல் உண்மை என்றால் அடுத்தடுத்து  பெரிய ஹீரோக்களின் படத்தில் அவர் வலம் வருவார் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகள்

டாக்டர் பட நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்பு

People looking for online information on Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.