தளபதி விஜய்யின் பாடலுடன் மாஸாக என்ட்ரி கொடுத்த ஆரி.. லீக்கான கொண்டாட்ட வீடியோ வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதேபோல் ஆரிக்கு கொடிக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர் அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

aari entry in biggboss kondattam leaked மாஸாக என்ட்ரி கொடுத்த ஆரி

106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு. எனவே அடுத்ததாக ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடக்கும் பிக்பாஸ் கொண்டாட்டத்தை தான் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது ஆரியின் அறிமுக காட்சியில் தளபதி விஜயின் வாத்தி கம்மிங் பாடலுடன் செம மாஸாக உள்ளே நுழைகிறார். லீக்கான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Tags : Aari

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

aari entry in biggboss kondattam leaked மாஸாக என்ட்ரி கொடுத்த ஆரி

People looking for online information on Aari will find this news story useful.