நாக்க நீட்டி தேன நக்கி ஆஹான்னு சொன்னா..!- சூப்பர் டீலக்ஸ்க்கு சென்சார் கொடுத்த ரேட்டிங் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும் மார்ச்.29ம் தேதி ரிலீசாகவுள்ளது.

Vijay Sethupathi's Super Deluxe running time and censor rating announced

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் என்டர்டெயின்மென்ட் மற்றும் அல்கேமி விஷன் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் மூலம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் குழு வெளியிடவுள்ளது. 

விஜய் சேதுபதி குரலில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ஓடும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எந்த வித காட்சிகளையும் நீக்காமல் இப்படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் 2 மணிநேரம் 56 நிமிடம் ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் மார்ச்.29ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.