சமந்தாவின் ஓ பேபி: மீண்டும் வெள்ளித்திரைக்கும் வரும் பழம்பெரும் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ பேபி’ திரைப்படத்தின் மூலம் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Veteran actress Lakshmi is playing an important role in Samantha's Oh Baby

‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் ரீமேக் திரைப்படமான ‘ஓ பேபி’ திரைப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார். சுரேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தில் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகசவுரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் 70 வயது பாட்டியாகவும், 20 வயது பெண்ணாகவும் சமந்தா நடிக்கவிருக்கிறார்.

தற்போது சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படமும், தெலுங்கில் ‘மஜிலி’ என்ற திரைப்படமும் இம்மாதம் ரிலீசாகவுள்ளது.