www.garudabazaar.com

அப்பா சிவக்குமாரின் படத்தலைப்பில் மகன்! சூர்யா பிறந்தநாளில் வெளியான வெறித்தனமான போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் லுக் வீடியோ நேற்று ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஜூலை 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. 

suriya movie etharkkum thunindhavan poster is released

படத்தின் போஸ்டரில் சூர்யா கையில் வாள் வைத்துக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்து அமர்ந்திருப்பது போன்று கருப்பு சிவப்பு நிறத்தில் போஸ்டர் வெளிவந்துள்ளது. இந்த போஸ்டர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள காட்சியை நினைவூட்டுவது போல் அமைந்திருப்பதாக சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

suriya movie etharkkum thunindhavan poster is released

மேலும் இந்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் தலைப்பானது 1977 ஆம் ஆண்டு சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் நடித்து வெளியான படத்தின் பெயராகும். பழைய 'எதற்கும் துணிந்தவன்' என பெயர் கொணட நடிகர் சிவக்குமார் படத்தின் போஸ்டரையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

suriya movie etharkkum thunindhavan poster is released

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார். இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசையமைப்பாளர் டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

suriya movie etharkkum thunindhavan poster is released

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘நவரசா’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தில் சூர்யா நடித்துள்ளார். இதன் சிங்கிள் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட்டடித்தன. இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் Tittle Look போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

suriya movie etharkkum thunindhavan poster is released

People looking for online information on D Imman, ET, Etharkkum Thuninthavan, Priyanka Mohan, R. Rathnavelu, Suriya, Suriya 40 will find this news story useful.