www.garudabazaar.com

#Suriya40: Firstlook-உடன் வெளியான ‘மரண மாஸ்’ கமர்ஷியல் டைட்டில்! fansக்கு டபுள் ட்ரீட்! வெளியான Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா40’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டு குறிப்பிடப்பட்டு வந்த படத்தின் ஃபர்ஸ்ட் டைட்டில் லுக் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.

suriya40 first look and title is out video sun pictures

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்பட நாயகி பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 40வது படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் சூர்யா40 படத்தின் தலைப்பு வெகுஜன மக்களை ஈர்க்கும்படியாக இருக்கும் என்று இயக்குநர் பாண்டிராஜ் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதியை முன்னிட்டு,  ஜூலை 22 மாலை 6 மணிக்கு சூர்யா40 படத்தின் ஃபர்ஸ்ட் டைட்டில் லுக் வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதன்படி சூர்யா40 படத்தின் மரண மாஸ் ஃபர்ஸ்ட் டைட்டில் லுக்கை வீடியோவுடன் பகிர்ந்துள்ளது இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதன்படி, சூர்யா40 படத்துக்கு, “எதற்கும் துணிந்தவன்”  என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இது நிச்சயமாக அவரது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் பக்கா பிறந்தநாள் ட்ரீட் தான். ஆனாலும் இந்த டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக்கும் வீடியோவாக வெளியானதால் இது டபுள் ட்ரீட்.

இதனிடையே நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுக்கு தயாராக உள்ள ஆந்தாலஜி திரைப்படமான ‘நவரசா’ படத்தின் ஒரு பகுதியான கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். இதன் சிங்கிள் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் first look போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ARR குறித்து பாலகிருஷ்ணா சர்ச்சை பேச்சு.. கொதிக்கும் ரசிகர்கள்! அப்படி என்ன சொன்னார்? Video!

தொடர்புடைய இணைப்புகள்

suriya40 first look and title is out video sun pictures

People looking for online information on D Imman, EtharkkumThunindhavan, Pandiraj, Sun pictures, Suriya, Suriya40firstlook, Suriya40Title, Suriya40TitleLook will find this news story useful.