வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை வசனம் எழுதி நடித்திருக்கும் படம் எல்கேஜி. இந்த படத்தை கே.ஆர்.பிரபு இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஸ், ராம்குமார், நாஞ்சில் சம்பத், மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
அரசியலை மையமாக வைத்து கடந்த மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் எம்ஜிஆர் நடித்த 'மலைக்கள்ளன்' படத்தின் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடலின் ரீமிக்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் - ஆர்ஜே பாலாஜியின் 'எல்கேஜி' படத்தின் வீடியோ பாடல் இதோ ! வீடியோ