'விஸ்வாசம்' படத்துக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ஐரா. இந்த படத்தை 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் இயக்குநர் சர்ஜூன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்க, சுதர்சன் ஸ்ரீநிவாசன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் வருகிற மார்ச் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இணையதள வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த 'கொலையுதிர் காலம்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.