‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். குறும்பட இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் முரட்டு சிங்கிளாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.
இந்நிலையில், முரட்டு சிங்கிள்ஸ்க்காக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘காதலிக்க யாருமில்லை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘டிக் டிக் டிக்’,‘மிருதன்’,‘கொடி’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான எஸ்.வெங்கடேஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது தவிர ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ‘வாட்ச்மேன்’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’, இயக்குநர் சசி இயக்கி வரும் திரைப்படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தடுத்து இப்படங்கள் ரிலீசாகவுள்ளது.
God is busy writing my love story machan 😂😂😂 #kadhalikkaYarumillai motion poster ... #afilmforMorattuSingles @raizawilson @dirKamalPrakash @auraacinemas pic.twitter.com/necLkpe4tK
— G.V.Prakash Kumar (@gvprakash) March 7, 2019