பிரபல ஹீரோவின் தயாரிப்பில் நடிக்கும் நடிகை அமலா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் கிருஷ்ணா தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ள ‘High Priestess’ வெப் சீரிஸில் பிரபல நடிகை அமலா அக்கினேனி நடித்துள்ளார்.

Actor Krishna’s maiden production of web series titled “High Priestess” featuring Amala Akkineni

ரசிகர்களுக்கு நல்ல கதைகளை கொடுக்கும் நோக்கில் OTT தளங்கள் மூலம் கற்பனை சுதந்திரத்துடன் கொடுக்க கிருஷ்ணா திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, அவர் தொடங்கியுள்ள ‘ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெப் சீரீஸ், டிஜிட்டல் ஒரிஜினல்ஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்துவதாக நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் உருவாகியுள்ள ‘High Priestess’ என்ற வெப் சீரிஸ் அருமையாக வந்திருப்பதாகவும், இதில் பிரபல நடிகை அமலா நடித்திருப்பது தனக்கு பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக இதனை நடிகர் நாகார்ஜுனா அறிமுகம் செய்தது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடையே சென்று சேர்ந்துள்ளது என நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கிருஷ்ணா தயாரிக்க, புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரீஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ZEE5 வலைத்தளத்தில் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.