'தென் இந்தியாவில் கால் பதித்த பா.ஜ.க.'.. 'ஆனா இங்க மட்டும் இல்ல'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 23, 2019 12:10 PM
இந்தியா முழுவதும் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராகிறார் நரேந்திர மோடி. ஆனால் தென் இந்தியாவில் பா.ஜ.க.வின் நிலைமை எப்படி உள்ளது.

17-வது லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பிடித்திருக்கிறது பா.ஜ.கட்சி. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் 543 தொகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை அள்ளியுள்ளது பா.ஜ.கட்சி. இந்த பெரும்பான்மையை பா.ஜ.க தலைவர்கள் அக்கட்சியின் தொண்டர்களுடன் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இக்கொண்டாட்டம் ஒரு புறம் இருந்தாலும் தென் மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளாவில் ஒரு இடம் கூட பிடிக்கக்கூட முடியாத பரிதாப நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், நாயினார் நாகேந்திரன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் படு தோல்வியை சந்தித்துள்ளனர்.
இதே நிலைமைதான் கேரளாவிலும். அங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு இடங்களில் கூட வெற்றியை பெற முடியாமல் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றிபெறவில்லை. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க. எப்போதும் பெரும் பின்னடைவையே சந்திக்கும்.
ஆனால் இந்த முறை சற்று மாறி தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் 23 இடங்களைப் பிடித்து முதன் முறையாக தென்னகத்தில் வெற்றி கனியை பறித்திருக்கிறது பா.ஜ.கட்சி. தெலுங்கானாவில் 4 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக பாஜகவினை வரவேற்றிருக்கிறது தெலுங்கானா.
