ஆத்தாடி மைனஸ் 50 டிகிரி குளிரா.. அசால்ட்டாக டீல் செய்யும் மனிதர்கள்.. எங்கய்யா இருக்கு இந்த ஊரு?.
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக கடுமையான குளிர் கொண்ட நகரமாக கருதப்படும் யாகுட்ஸ்க்-கில் வசிக்கும் மக்கள் இத்தனை குளிரிலும் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read | "அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இல்லை".. 'தமிழ்நாடு சர்ச்சை'.. ஆளுநர் பரபரப்பு விளக்க அறிக்கை..!
காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் திடீர் வெப்பம் மற்றும் தாங்க முடியாத குளிர் ஒருசேர தாக்கி வருகிறது. கடந்த வருடத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மோசமான வெப்பநிலை உயர்வை சந்தித்தன. வெப்ப அலை காரணமாக பல ஏரிகள் வறண்டு போனதுடன், காடுகளிலும் தீப்பிடித்து அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள யாகுட்ஸ்க் நகரம் இந்த வருடம் மோசமான குளிரை சந்தித்து வருகிறது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 5,000 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த நகரம். கோடை காலத்தில் இங்கே அதிகபட்சமாக 34 டிகிரி வெப்பநிலை இருக்கும். அதுவே குளிர்காலம் என்றால் வெளியூர் மக்கள் இந்த நகரத்தின் பக்கம் கூட செல்ல முடியாது. ஏனெனில் மைனஸில் சென்றுவிடும் வெப்பநிலை இயல்பு வாழ்க்கையை மிக மோசமாக பாதிக்கும் வல்லமை கொண்டது.
இங்கே கடந்த வாரம் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரியை தொட்டிருக்கிறது. அதீத குளிர் காரணமா இங்குள்ள லேனே ஆறு பாறைபோல உறைந்துவிட்டது . தற்போது அதனை மக்கள் சாலைபோல பயன்படுத்தி வருகிறார்களாம். குளிர்காலத்தில் உறைந்த மீன்களை உண்டு வாழும் இந்த நகரத்து மக்கள் 2 அல்லது 3 ஆடைகளை அணியவேண்டிய அவசியத்தில் உள்ளனர். இதுபற்றி சொல்லும் உள்ளூர் வாசியான அனஸ்டாசியா குருஸ்டெவா,"இந்தக் குளிரை நீங்கள் எதிர்த்து போராட முடியாது. ஒன்று அதற்கேற்றவாறு நீங்கள் தயாராக வேண்டும். அல்லது குளிரால் நடுங்க வேண்டும். மனதளவில் நாம் தயராகும் போது, குளிர் நமக்கு உறைக்காது. அல்லது நாம் அதற்குப் பழகிவடுவோம்" என்கிறார்.
இந்த கடுங்குளிருக்கு பழக்கப்பட்ட இந்த மக்கள் வழக்கம்போல தங்களுடைய பணிகளை மேற்கோண்டு வருகின்றனர். ஆனால், இதுவே வெளியூர் மக்களுக்கு இது நிச்சயம் கெட்ட கனவாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.