யம்மாடி எவ்வளவு இருக்கு.. படையெடுத்த முதலைகள்.. உறையவைக்கும் வீடியோ.. அதிகாரிகள் கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Sep 20, 2022 03:09 PM

நீர்ப்பரப்பின் அருகே ஆயிரக்கணக்காண முதலைகள் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்திருக்கின்றனர்.

Video of crocodiles on Brazilian beach goes viral

Also Read | "தங்க இடம் இல்லாம யாரும் கஷ்டப்பட கூடாது".. சாலையில் வசிப்பவர்களுக்கு லட்ச கணக்கில் பணம் கொடுக்கும் நகரம்.. சட்டமே போட்ருக்காங்களாம்..!

தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான முதலைகள் ஓய்வெடுப்பது போல தெரிகிறது. சில முதலைகள் நீரில் நீந்துகின்றன. இந்த வீடியோவை  Ken Rutkowski என்பவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கொஞ்ச நேரத்திலேயே இந்த வீடியோ வைரலாகி விட்டது. Ken Rutkowski தனது பக்கத்தில்,"பிரேசிலில் முதலைகள் படையெடுத்துள்ளன. ஆயிரக்கணக்கான முதலைகள் கடற்கரையில் குவிந்திருக்கின்றன. இதனால் உள்ளூர் மக்கள் பீதியடைந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

யாக்கரே கெய்மன்

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் இதுகுறித்து பல்வேறு விதமான கருத்துக்களை கமெண்ட்களாக பதிவிட்டு வந்தனர். ஒருவர்,"இதனை படையெடுப்பு என்று சொல்ல வேண்டாம். இதன் பெயர் மீட்டெடுப்பு. பல ஆண்டுகளாக மனிதர்கள் தங்களது வீடுகளை ஆக்கிரமித்ததை மீட்டெடுக்க இந்த முதலைகள் முயற்சி செய்கின்றன" என கமெண்ட் செய்திருக்கிறார் மேலும் ஒருவர் புவி வெப்பமடைவதே இதற்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவில் ஒருவர் "இவை யாக்கரே கெய்மன், மற்ற முதலைகளைப் போலவே, இவை எக்டோர்மிக் அல்லது 'குளிர் ரத்தம்' கொண்டவை. தங்கள் உடல் வெப்பநிலையை உயர்த்த, இவை நேரடியாக சூரிய ஒளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும். அதற்காக நிலப்பரப்பில் காத்திருக்கின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Video of crocodiles on Brazilian beach goes viral

உண்மை என்ன?

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இது பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியது. உண்மையில் முதன்முறையாக இந்த வீடியோவை விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Pantanal Pesca வெளியிட்டிருந்தது. மேலும், இது பிரேசிலில் உள்ள ஆற்றங்கரையில் எடுக்கப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. மேலும், இது crocodiles அல்ல எனவும் alligators வகையை சேர்ந்தவை எனவும் இந்த பகுதியில் இது வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்றுதான் எனவும் உள்ளூர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த வீடியோ இதுவரையில் 8 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "பல வருஷமா இது நடந்திருக்கு".. 72 வயது பெண் வழக்கறிஞர் மீது வந்த சந்தேகம்.. இந்தியாவையே புரட்டிப்போட்ட சம்பவம்..!

Tags : #CROCODILES #BRAZILIAN BEACH #CROCODILES ON BRAZILIAN BEACH #முதலைகள்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Video of crocodiles on Brazilian beach goes viral | World News.