'நான் சொன்னத மொதல்ல பண்ணுங்க...' 'இல்லனா டிக்டாக்-ஐ தடை செஞ்சிடுவோம்...' 'செப்டம்பர் 15 தான் டெட்லைன்...' - ட்ரம்ப் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் அல்லது ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என கெடு விதித்துள்ளார்.
சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி உலகெங்கிலும் பரவி அதிக மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவிலும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர்களின் சந்திப்பில், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் அல்லது அமெரிக்காவை சார்ந்த ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு, பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயல்பாட்டை விற்க வேண்டும், இல்லையெனில் அதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெள்ளா டிக்டாக் செயலியை கைப்பற்றுவது குறித்து அதிபர் டிரம்ப்புடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதுகுறித்து கூறிய அமெரிக்க அதிபர், 'சமூக ஊடக நிறுவனமான டிக்டாக்கின் விற்பனையின் ஒரு பகுதியை யு.எஸ். கருவூலம் சேகரிக்க வேண்டும். அல்லது அமெரிக்காவை சேர்ந்த ஏதேனும் ஒரு நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கினாலும் அதனுடைய கணிசமான பகுதியில் அமெரிக்க கருவூலத்திற்கு அதாவது கஜானாவிற்கு வர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், இது ஒரு நிலம் குத்தகைக்கு விடுவோர் மற்றும் குத்தகைக்காரர் உறவு போன்றது. அந்த நிலத்தில் என்ன வருமானம் வருமோ அதை நிலத்திற்கு சொந்தக்காரருக்கு தர வேண்டியது குத்தக்கைகாரரின் கடமை' எனவும் கூறியுள்ளார்.