“அமிதாப், அபிஷேக் பச்சன்களுக்கு கொரோனா!”.. ”ஐஸ்வர்யா ராய் நிலை என்ன?”.. இந்திய அளவில் அதிர்வை ஏற்படுத்திய பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 12, 2020 09:33 AM

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Amitabh Bachhan, Abishek covid19 positive AishwaryaRai result waiting

இந்திய அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சாமானிய மக்களையும் தாண்டி காவல்துறையினர், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இப்படி ஒரு சூழலில்தான் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், தனக்கும் தன் தந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறிகளுடன் இருவரும் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் எனது குடும்பம் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். இதனிடையே 10 நாட்களாக என்னுடன்

நெருக்கமாக இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் இருவருக்குமான கொரோனா பரிசோதனை தொற்று முடிவுகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதனிடையே அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் பதிவுக்கு பதிலளித்துள்ள பல்வேறு தரப்பினரும் விரைவில் இருவரும் கொரோனாவில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Amitabh Bachhan, Abishek covid19 positive AishwaryaRai result waiting | India News.