பீர் வேண்டாம் செல்லங்களா...! 'சில்லுன்னு தயிர் சாப்பிடுங்க...' 'அதிபர் கொடுத்த அறிவுரை...' 'எங்க கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்...' - பார் ஓனர்கள் சேர்ந்து செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பீருக்கு மாற்றாக தயிர் அருந்தலாம் என துருக்கி அதிபர் கூறியதற்கு எதிராக மதுக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துருக்கியில் ஊரடங்கு பின்பற்றிவரும் நிலையில் கஃபே, சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மதுபான கடைகள், பார் மற்றும் இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் கடந்த 11 மாதங்களாகப் பூட்டப்பட்டுள்ளன. இதுவரை திறக்க அனுமதிக்கப்படவில்லை.
அதுமட்டுமில்லாமல் துருக்கி அதிபரான எர்டோகன், தன் மார்க்கத்தின் பகுதியாக ஆல்கஹாலை வெறுக்கும் நிலையில், மது அருந்துதல் சமூகத்து எதிரானது என்றும் தார்மீக ரீதியாகத் தீங்கு விளைவிப்பது என்றும் அடிக்கடி பொது இடங்களில் கூறி வருகிறார். சில இடங்களில் துருக்கியர்கள் மது அருந்துவதை தவிர்த்துவிட்டு குளிர்ந்த தயிரை அருந்துமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதிபரின் இந்த செயலால் பாதிக்கப்பட்ட பார் முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி மதுபான விடுதிகளை திறந்து வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடை உரிமையாளர்கள் ஊழியர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'நாங்களும் எங்கள் வாழ்வை நடத்த வேண்டும். கடந்த 11 மாதங்களாக நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்குத் தான் தெரியும். சுகாதார விதிகளின் கீழ் மதுக் கடைகளைத் திறக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்' என பார் உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
