"இந்த போர் இதோட நிக்காது.. இன்னும் பல வருஷம் நடக்கலாம்.. ரெடியா இருங்க.." இங்கிலாந்து அமைச்சரின் பரபரப்பு கருத்து! பதறும் உலக நாடுகள்
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் போர் பற்றி தான் மொத்த உலகமும் பேசிக் கொண்டிருக்கிறது.

"ரோஹித் கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்.." எச்சரிக்கும் முன்னாள் வீரர்.. ஓஹோ, இதான் விஷயமா?
கடந்த 4 நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் நாட்டின் பல பகுதியை ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்து வருவதாக தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளது.
இரு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் இந்த மோதலில் பலியாகியுள்ளனர். அதே போல, உக்ரைன் நாட்டினை சேர்ந்த பொது மக்கள் பலரும் உயிரிழந்ததாகவும் உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டிருந்தது.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை
இதனிடையே, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. பெலாரஸ் நாட்டில் வைத்து, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகியோர், போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன்
இது தொடர்பாக பேசிய இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ், 'ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர், ஒரு நீண்ட பயணமாக இருக்கலாம் என நான் அஞ்சுகிறேன். அது பல வருடங்களாக கூட இருக்கலாம். ரஷ்யா வலுவான சக்திகளைக் கொண்டுள்ளது. இருந்த போதிலும், உக்ரைன் நாட்டினர் தைரியமானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
புதின் சந்திக்க போகும் விளைவு
அவர்கள் தங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக நிற்க உறுதியாக உள்ளனர். மேலும் அவர்கள் போராடுவதிலும் உறுதியாக உள்ளனர். ரஷ்ய ராணுவத்தினை தொடர்ந்து, உக்ரைன் படைகள் எதிர்த்து வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இருந்தாலும், ரஷ்ய அதிபர் புதின் இன்னும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும். புதின் முடிவின் தொடக்கமாக கூட இந்த போர் இருக்கலாம்.
அச்சமாக உள்ளது
விரும்பத்தகாத வழிகளை பயன்படுத்தவும் புதின் தயாராக இருக்கிறார் என்பது தான் அச்சமாக உள்ளது. இந்த மோதல் மிகவும் ரத்தக்களரியாக இருக்கும். ரஷ்யா இன்னும் மோசமான ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதால், உலகம் தயாராக இருக்க வேண்டும். இருப்பினும், உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே கவனித்து வருகிறது, இதனால் புதினுக்கு தனிப்பட்ட முறையில் கடுமையான விளைவுகள் இருக்கும்' என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஒரு பக்கம் ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்னும் சில ஆண்டுகளுக்கு போர் நீடிக்கலாம் என்ற இங்கிலாந்து வெளியுறவுத் துறையின் கருத்து, உலக நாடுகள் மத்தியில் அதிகம் பதற்றத்தை உண்டு பண்ணியுள்ளது.

மற்ற செய்திகள்
