'காப்பாத்தணும்... 'அது'ல இருந்த இவங்கள எப்படியாவது காப்பாத்தணும்'!.. கொடிய விஷம் கொண்ட பாம்புகள்... புத்த துறவியின் பகீர் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Dec 04, 2020 07:10 PM

மியான்மரை சேர்ந்த புத்தமத துறவி ஒருவர், கொடிய பாம்புகளை மகன்களாகவும், மகள்களாகவும் பாவித்து வளர்க்கிறார்.

myanmar monk creates refuge for snakes at monastery details

உலகில் மிக ஆபத்தான பிராணிகள் பல இருந்தாலும், பாம்புகளுக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. பாம்புகளை வைத்து பல சாகசங்களை நாம் பார்த்திருப்போம். அதிலும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் சாகசங்கள் மனிதர்களிடையே ஒரு வித அச்ச உணர்வையும், வியப்பையும் ஏற்படுத்தும்.

ஆனால், இங்கு ஒரு புத்த துறவியோ, ஆபத்தான பாம்புகளை தன்னுடைய வாரிசுகளாக பாவித்து வருகிறார். 

myanmar monk creates refuge for snakes at monastery details

69 வயதான துறவி  விலாதா, வீடுகள் உள்ளிட்ட  இடங்களில் பிடிபடும் பைத்தான், வைபர், கோப்ரா உள்ளிட்ட பாம்புகளை வாங்கி வந்து யாங்கூனில் உள்ள ஆசிரமத்தில் வளர்க்கிறார்.

myanmar monk creates refuge for snakes at monastery details

பாம்புகள் கொல்லபடுவதை தடுப்பதற்காகவும்,  சீன பாரம்பரிய மருந்துக்காகவும் கள்ளசந்தையில் விற்க கடத்தப்படுவதை தடுப்பதற்காகவும், இதுபோல செய்வதாக தெரிவிக்கும் அவர், பாம்புகளை கண்டு அஞ்சாமல் தோளில் மாலையாக போட்டு அமர்கிறார்.

myanmar monk creates refuge for snakes at monastery details

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Myanmar monk creates refuge for snakes at monastery details | World News.