'புராதன' சின்னமாக அறிவிக்கப்பட்ட 'புனித' இடத்தில்... இந்த வேலையை செய்யலாமா?... கோபமாக 'கமென்ட்' செய்த 'புத்த' மதத்தினர்....

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 15, 2020 12:31 AM

யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் ஆபாசப்படம் எடுக்கப்பட்ட சம்பவம் மியான்மரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The worst incident was reported at Heritage Place

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் உள்ள பாகன் என்ற பகுதி யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்த மத்தினரின் புனித தலமாகவும் பாகன் உள்ளது. இப்பகுதியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிலர் ஆபாச படம் எடுத்த தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மியான்மரில் உள்ள புத்த மதத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகனில் உள்ள புகழ்பெற்ற கோட்டைப் பகுதியில் 12 நிமிட வீடியோவாக பதிவு செய்யப்பட்ட இந்த ஆபாச காட்சி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரைச் சேர்ந்தவர்கள் இந்த வீடியோவின் கீழே, “புனித இடத்தில் வந்து இந்த வேலையைச் செய்துள்ளீர்கள்” என்று கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்று சுற்றுலா பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : #MYANMAR #BUDDHIST #WORST INCIDENT #HERITAGE PLACE