"மொத்தமா 5000-க்கும் மேல.." பூட்டிய வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீஸ்.. உள்ள என்ன தான் இருக்குன்னு பாத்தப்போ காத்திருந்த அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக திருடர்கள் என்றாலே, பணம், நகை, கார், பைக் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அதே போல, சில திருடர்களுக்கு என்று பிரத்யேகமான ஸ்டைலும், ஏதாவது ஒரு பொருளை மட்டுமே விரும்பி திருடுவது பற்றியும் நாம் நிறைய செய்திகளை கடந்து வந்திருப்போம்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவன், தான் பல நாட்களாக திருடிச் சேர்த்த ஒரு பொருள் பற்றி அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிய வரவே, அவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தும் போயுள்ளனர்.
வீட்டுக்குள் இருந்த உள்ளாடைகள்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் வடக்கிலுள்ள Reservoir பகுதியில், ஹிக்போர்ட் என்னும் தெருவில் சில வீடுகள் உள்ளது. அங்கே உள்ள ஒரு வீட்டில், குற்றப் புலனாய்வு பிரிவு உத்தரவின் பெயரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அந்த வீட்டிற்குள் நடத்திய சோதனையின் போது, சுமார் 5000-க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
"பெண்களின் உள்ளாடைகள் கூடவே.."
அப்பகுதியிலுள்ள பல வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வந்ததாக கூறப்படும் நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் அந்த வீட்டுக்குள்ளே சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் பெண்களின் உள்ளாடைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது போக, பெண்கள் உடற்பயிற்சி செய்யும் போது அணியும் ஆடைகளும் அங்கே இருந்துள்ளது.
அந்த வீட்டில் ஆண் ஒருவர் வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில், அங்கே உள்ளாடைகள் மற்றும் ஜிம் உடைகள் திருடு போன நபர்கள், போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே வேளையில், இது பற்றி மேலும் தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனே தொடர்பு கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மற்ற செய்திகள்
