செல்ஃபி'ய வித்தே 7 கோடி ரூபா சம்பாதிச்சுட்டாப்ல.. VIP'க்களை சோதித்த கல்லூரி மாணவன்.. அப்படி என்னய்யா இருக்கு அதுல?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியா : தன்னுடைய செல்ஃபி புகைப்படங்கள் மூலம் மட்டுமே, சுமார் 7 கோடி ரூபாய் வரை கல்லூரி மாணவர் ஒருவர் வென்றுள்ளார்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டமான, டிஜிட்டல் யுகத்தில், நம்மைச் சுற்றி, நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கொரோனா தொற்றிற்கு பிறகான காலத்தில், யூடியூப், டிக் டாக், பேஸ்புக் உள்ளிட்ட பல தளங்களின் மூலம், சாதாரண மக்கள் கூட, தங்களுக்கு தெரிந்தவற்றை வீடியோக்களாக, பதிவேற்றி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தும் வந்தனர். அது மட்டுமில்லாமல், இதன் மூலம் பணம் சம்பாதித்தும் வருகின்றனர்.
செல்ஃபி விற்று காசு
அந்த வகையில் பார்த்தால், வீடியோக்கள் எடுக்க வேண்டி, சற்று மெனக்கெட வேண்டியிருக்கும். ஆனால், இந்தோனேசியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய செல்ஃபி புகைப்படங்களை மட்டுமே விற்று, சுமார் 7 கோடி ரூபாய் வரை சம்பாதித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
முகபாவனை இல்லாத போட்டோ
22 வயதாகும் கோசாலி கோசாலோ என்ற இளைஞர், அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். சுமார், நான்கு ஆண்டுகளாக, அதாவது, கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, தனது பட்டப்படிப்பு சமயத்தில், டைம் லாப்ஸ் வீடியோ ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதன் படி, கணினி முன் தான் தினமும் உட்காரும் போது, முக பாவனை இல்லாத, தனது செல்ஃபி புகைப்படங்களை தினமும் எடுத்துள்ளார்.
விலை நிர்ணயம்
அதனை ஒரு வீடியோவாக மாற்ற வேண்டித் தான் அப்படி பணிகளை மேற்கொண்டார். ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பிளாக்செயின் என்னும் தொழில்நுட்பம் குறித்து அறிந்த கோசாலி, 'Ghozali Everyday' என்ற பெயரில், தனது செல்ஃபிக்களை OpenSea -ல் பதிவேற்ற முடிவு செய்தார். அது மட்டுமில்லாமல், அவற்றிற்கு 3 டாலர் என விலையையும் அவர் நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா? வாங்க.. வாங்க.. நம்ம பசங்கலாம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க!
சுமார் 7 கோடி வரை விற்பனை
அப்படி செய்த பிறகு தான், யாரும் நினைக்காத, ஒரு விஷயம் அரங்கேறியுள்ளது. அவருடைய செல்ஃபி, 0.247 கிரிப்டோ கரன்சி, Ether அளவில் விற்கப்பட்டது. இதன் படி, கடந்த 14 - ஆம் தேதியன்று, அதன் மதிப்பு சுமார் 806 டாலர்களாக உயர்ந்துள்ளது. இறுதியில், 317 Ether என்ற நிலைக்கு எட்டியது. இதன் மதிப்பு சுமார் 1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி வரை) விட அதிகமாகும்.
இளைஞர் வேண்டுகோள்
இதுகுறித்து பேசியுள்ள கோசாலி, அடுத்த சில ஆண்டுகளுக்கு தான் செல்ஃபி புகைப்படங்களை எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல, எனது புகைப்படங்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்றும், அதே நேரத்தில், தயவு செய்து, தவறான முறையில் எனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படி செய்வது தனது பெற்றோர்களை காயப்படுத்தும் என்பதால், அவர் அப்படி ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.
இதில் தனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு, அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கவும், கோசாலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.