'எவ்வளவு போராட்டம்...' 'உலகத்தையே திரும்பி பார்க்க வச்ச கப்பல்...' வெளியான 'பரபரப்பு' தகவல்...! - ஓனர்ஸ் எல்லாரும் பயங்கர மகிழ்ச்சி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 29, 2021 11:00 PM

எகிப்தின் சூயஸ் கால்வாயில் கடந்த 23-ம் தேதி ஜப்பான் நாட்டை சேர்ந்த எவர்கிரீன் என்ற ராட்சத சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்று காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது.

Suez Canal Evergreen ship is now floating in the water

பல நாட்களாக சீக்கியிருக்கும் இந்த கப்பலால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை கூட ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. ஏனென்றால் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ஆப்பிரிக்க கண்டத்துக்கும், சினாய் தீபகற்பத்துக்கும் இடையிலான இருக்கிறது.

                                    Suez Canal Evergreen ship is now floating in the water

சரக்கு போக்குவரத்து கடல்வழிப் பாதையில் உலகின் மிக முக்கியமான ஒன்றான இந்த  வழித்தடத்தின் மூலமே ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் இணைக்கப்படுகின்றன. இதனால், சூயஸ் கால்வாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் வர்த்தகம் மற்றும் கடல் வழித்தடமாக விளங்குகிறது.

                            Suez Canal Evergreen ship is now floating in the water

எவர்கிரீன் கப்பலால், பிற கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, சுமார் 321 கப்பல்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இந்த கப்பலை மீட்க, 7-வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடந்தன.

                            Suez Canal Evergreen ship is now floating in the water

இதுநாள் வரை , கப்பல் தரை தட்டிய இடத்தில் இருந்து 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது. 14 இழுவை கப்பல்கள் கொண்டு கப்பலை நகர்த்த முயற்சிகள் செய்ததில் இன்றுதான் எவர் கிரீன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

                              Suez Canal Evergreen ship is now floating in the water

6 நாட்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு, தற்போது சுயமாக எவர்கிரீன் கப்பலே நகர தொடங்கியது. இதன் காரணமாக ஏனைய பிற கடலில் சிக்கிய 300-க்கும் அதிகமான கப்பல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suez Canal Evergreen ship is now floating in the water | World News.