"இது அமெரிக்காவோட முடியப் போறது இல்ல!.. மௌனமா இருக்குற நேரம் இதுவா? பேச மாட்டீங்களா?".. ஐசிசிக்கு கிரிக்கெட் வீரர் சரமாரி கேள்வி!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக பூட்ஸ் காலால் நெருக்கியதால், மரணமடைந்த கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு விவகாரம் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமியின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
உலகம் முழுவதும் ஜார்ஜ் படுகொலைக்கு கண்டனம், போராட்டம் வலுத்து வரும் நிலையில் அமெரிக்காவில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்கிற கோஷங்கள் கிளர்ந்தெழுந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் கிரிக்கெட் சங்கங்களுக்கு, டேரன் சமி வைத்த கோரிக்கையில், “இன்னும் ஏன் இந்த மௌனம். இது மௌனமான நேரம் அல்ல. நிறவெறி மற்றும் சமூக அநீதிகளுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய சூழல்” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டரில், “இந்த நிறவெறி என்பது அமெரிக்காவுடன் முடிவடைவதில்லை. உலகம் முழுவதற்குமானது. இன்று என் சகோதரனின் தொண்டையில் பூட்ஸ் கால் வீடியோவை பார்த்த பிறகும், கிரிக்கெட் உலகம் இன்னும் ஏன் மௌனம் சாதிக்கிறது? என்னை போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை ஐசிசி மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் இன்னுமா உணரவில்லை? எங்களுக்காக நீதி கேட்க மாட்டீர்களா? சமூக அநீதிகளுக்கு எதிராக நீங்கள் பேச மாட்டீர்களா? நான் உங்கள் குரல்களைக் கேட்க விரும்புகிறேன்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.