‘ஆயுதங்களைத் தானே பயன்படுத்தக் கூடாது?’.. இந்திய எல்லையில் சீனாவின் மிரளவைக்கும் வியூகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 30, 2020 10:18 AM

கடந்த 15ஆம் தேதி கிழக்கில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்.

china sent martial arts to lac before galwan clash

இந்திய எல்லையில் இதன் பின் போர் பதற்றம் நிலவியதை அடுத்து, நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்து வருகிறது. காரணம் தொடர்ந்து சீனா, நாளடைவில் தனது படை வீரர்களை எல்லையில் குவித்துக் கொண்டு வந்ததுதான். சீனா இந்தியா இடையே ஏற்கனவே கையெழுத்தான ஒப்பந்தப்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது. இந்த சூழ்நிலையில்தான் கல்வான் தாக்குதலுக்கு முன்பாக, தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை சீனா அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மவுண்ட் எவரெஸ்ட் ஒலிம்பிக் டார்ச் ரிலே அணியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கலப்பு தற்காப்புக் கலைக் கழகத்தின் வீரர்கள் உட்பட 5 புதிய வீரர்கள் பிரிவுகளை, கல்வான் தாக்குதலுக்கு முன்பாக திபெத்தின் தலைநகரான லாசாவில் ஆய்வுக்காக அனுப்பி வைத்ததாக சீனாவின் அதிகாரப்பூர்வ இராணுவ செய்தி நிறுவனமான சீன தேசிய பாதுகாப்பு செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென சர்வதேச தற்காப்பு கலை போட்டிகளில், பங்கேற்று வரும் 'என்போ பைட் கிளப்' வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மோதலில் இந்திய வீரர்களுடன் இந்த கிளப் வீரர்கள் சண்டையிட்டார்களா? என்று அதன் தலைவர் என்போவிடம் சர்வதேச ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல், ‘என்போ பைட் கிளப்பை சேர்ந்த வீரர்கள் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவத்தில் இணைந்ததாகவும், அவர்களின் வருகையால் படையின் பலம் அதிகரித்துள்ளதாகவும் சீன ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் வாங் ஹாய்ஜியாங் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China sent martial arts to lac before galwan clash | India News.