"2022" பத்தி பாபா வங்கா கணிச்சது என்ன??.. அதிர வைத்த குறிப்புகள்.. "2 விஷயம் கரெக்ட்டா இந்த வருசம் நடந்துருக்காம்.."
முகப்பு > செய்திகள் > உலகம்பாபா வங்கா என்ற பெயரைக் கேட்டாலே, பலருக்கும் எதிர்காலத்தை கணித்து தெரிவிக்கும் நபர் என்பது தான் நினைவில் வரும்.
எதிர்காலத்தில் நிகழ இருப்பது தொடர்பாக, பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து வைப்பது என்பது, சாதாரண காரியம் கிடையாது.
அது மட்டுமில்லாமல், உலக அளவில் மிக கவனம் பெறும் நிகழ்வுகளை பட்டியலிடுவது என்பதை தான் பாபா வங்கா செய்திருந்தார்.
பல்கேரியாவில் அக்டோபர் 3, 1911 ஆம் ஆண்டு பிறந்த பாபா வங்கா, 12 வயதில் தனது இரு கண் பார்வையையும் இழந்ததாக கூறப்படுகிறது. மணல் புயலில் சிக்கி இரு கண்பார்வையையும் இழந்ததாகவும் அதனால் எதிர்காலத்தை கணிக்கும் வரத்தை கடவுள் தனக்கு வழங்கியதாகவும் பலமுறை கூறியுள்ளார் பாபா வங்கா.
இவர் 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என கணித்ததாக கூறப்படுகிறது. அவரது குறிப்பில்,"எஃகு பறவைகளின் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க சகோதரர்கள் வீழ்வார்கள். ஓநாய்கள் புதரில் ஊளையிடும். அப்பாவிகளின் இரத்தம் வழியும்" என இருந்ததாக தெரிகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின்போது இந்த தகவல்கள் உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டது. அதேபோல, அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என வங்கா கணித்திருந்தார். அதன்படி பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வங்கா பாட்டிக்கு நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு, பாபா வங்கா இறந்து போன நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலகை ஆழ்வார் என கூறி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த வகையில், தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருவது என்பதை ஒப்பிட்டு பாபா வங்கா கணித்த விஷயம், அதிகம் வைரலாகி இருந்தது.
அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு பாபா வங்கா கணித்த சில விஷயங்கள் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் பெரு வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்படும் என பாபா வங்கா கணித்திருந்ததாக கூறப்படுகிறது. அது போல, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதி, மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும், உலகின் பெரு நகரங்கள் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கூறி இருந்தார். இதனை உண்மையாக்கும் வகையில், பல உலக நாடுகள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கூட வறட்சி ஏற்பட்டுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இங்கிலாந்து மட்டுமில்லாமல், மற்ற ஐரோப்ப நாடுகளான போர்ச்சுகல் மற்றும் இத்தாலியும், நீர் விநியோகத்தை பாதுகாக்க மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். இது தவிர, 2022 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் சிபேரியா பகுதியில், கொடிய தொற்று ஒன்று கண்டுபிடிக்கப்படும் என்றும், இந்தியாவில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், விவசாய நிலங்கள் பெருமளவில் அழியும் என்றும் பாபா வங்கா கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.