2022-ல 'பெரிய_ஆபத்து' காத்திட்டு இருக்கு...! முன்கூட்டியே 'கணித்துள்ள' பாபா வங்கா பாட்டி...! -
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்ட்ரோ ஃபேம் என்ற இணைய வலைதளம் உலக மக்களுக்கு 2022-ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என மறைந்த பாபா வங்கா பாட்டி கூறிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
![Predictions made by late granny Baba Vanga about year 2022 Predictions made by late granny Baba Vanga about year 2022](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/predictions-made-by-late-granny-baba-vanga-about-year-2022.jpg)
இன்னும் சில நாட்களில் 2021-ஆம் ஆண்டு முடிந்து 2022 புது வருடம் பிறக்க உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டுகளில் சில நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடிகளையும் பல உயிரிழப்புகளையும் சந்தித்தது.
இன்றளவும் கொரோனா தாக்கம் முடியாத சூழலில் வரும் ஆண்டு இதன் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கையில் உலகம் 2022-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆண்டு எப்படி இருக்கும் என கணித்து சொல்லியுள்ள பாபா வங்கா பாட்டியின் கணிப்புகள் என்ன சொல்கிறது என பலர் இணையத்தில் தேடி வருகின்றனர்.
யார் இந்த பாபா வங்கா பாட்டி என சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த பாட்டி பல்கெரியா நாட்டை சேர்ந்தவர். பாபா வங்கா பாட்டி, 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண் பார்வையை இழந்துள்ளார்.
அதன் பின் என்னுடைய பார்வையை எடுத்த கடவுள் எனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்துள்ளார் என கூறியுள்ளார். அவர் கூறிய படியே பல சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்களை தெரிவித்துள்ளனர்.
பாபா வங்கா பாட்டி, கடந்த 1996-ஆம் ஆண்டு தன்னுடைய 84-வது வயதில் இயற்கை எய்தினார். இருந்தாலும் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என அவர் கணித்து சொல்லியுள்ளார். அவரது கணிப்புகளில் 85 சதவிகிதம் பலித்துள்ளது.
இதில் குறிப்பாக கூறவேண்டும் என்றால் 9/11 அன்று அமெரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குவார்கள் என முன்கூட்டியே அவர் கணித்திருந்த கணிப்புகளை, உதாரணமிட்டு காட்டுகின்றனர் அவரது ஆதாரவாளர்கள்.
மேலும் 2022-ஆம் ஆண்டும் எப்படி இருக்கும் என ஆஸ்ட்ரோ ஃபேம் என்ற வலைதளம் வெளியிட்டுள்ளது.
அந்த குறிப்பில் 'வரும் ஆண்டில் குடிநீருக்கான பஞ்சம் அதிகரிக்கும். ஆறு மற்றும் ஏரி மாதிரியான நீர் நிலைகள் மாசடைந்து வருவது இதற்கு காரணமாக இருக்கும். பெரும்பாலான மக்கள் மாற்று வழியில் அதற்கான தீர்வை காண முயற்சிகளை முன்னெடுப்பார்கள்.
வேற்றுகிரகவாசிகளான ஏலியன்களின் அச்சுறுத்தல் இருக்கும். வெப்பநிலையில் காணப்படும் மாற்றத்தால் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து தாக்கக்கூடும். பெரும்பாலான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா வெள்ளத்தில் சிக்கக்கூடும்.
மக்களின் டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையில் குழப்பம் ஏற்படும். மக்களை புதுவிதமான வைரஸ் தாக்கும்' என பாபா வங்கா பாட்டி கணித்துள்ளதாக ஆஸ்ட்ரோ ஃபேம் என்ற வலைதளம் தெரிவித்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)