பிறந்தநாள்-ல எலான் மஸ்க் செஞ்ச சம்பவம்.. ட்விட்டர்ல இதுவரை 5 பேர் தான் இந்த சாதனையை செஞ்சிருக்கங்களாம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்-கை ட்விட்டர் தளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது.
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.
பிறந்த நாள்
இன்று எலான் மஸ்க் தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரை ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியன்களாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் ட்விட்டர் பக்கத்தில் 100 மில்லியன் Followerகளை கொண்டவர்களின் பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார் மஸ்க். இந்த பட்டியலில் 132 மில்லியன் Followerகளுடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கிறார்.
அதேபோல இரண்டாம் இடத்தில் பாடகர் ஜஸ்டின் பீபர் (114 மில்லியன்), மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் முறையே கேட்டி பெர்ரி (108 மில்லியன்), மற்றும் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (101 மில்லியன்).ஆகியோர் உள்ளனர்.