யாரோ என் 'முயல' திருடிட்டாங்க...! கண்டுபிடிச்சு தர்றவங்களுக்கு 'வாவ்' பரிசு...! - இது மட்டும் திருடனுக்கு தெரிஞ்சுதுனா அவரே திருப்பி கொடுத்திடுவாரு...!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் நகரின், அருகே இருக்கும் ஸ்டூல்டன் கிராமத்தைச் சேர்ந்த அன்னெட் எட்வர்ட்ஸ் 'டாரியஸ்' என்ற முயலை வளர்த்துவருகிறார்.

கடந்த சனிக்கிழமை இரவு தோட்டத்தில் இருந்த முயல் காலையில் இருந்து காணவில்லை. முயல் காணாமல் சென்றதை அறிந்த முயலின் உரிமையாளர் எட்வர்ட்ஸ் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்த செய்தி தான் தற்போது அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது.
எட்வர்ட்ஸ் தனது ட்விட்டரில், 'இந்நாள் எனக்கு மிகவும் வருத்தமான நாள். என்னுடைய டாரியஸை காணவில்லை, அதனை கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். டாரியஸை என்னிடம் திருப்பி ஒப்படைத்து விடுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
என்னடா இது முயலுக்கு இவ்வளவு கெடுபிடியா என்று ஆராய்ந்து பார்த்ததில், அந்த டாரியஸ் முயலில் சிறப்பம்சம் வைரலாகி வருகிறது.
பழுப்பு-வெள்ளை நிறம் கொண்ட இந்த டாரியஸ் என்ற முயல் சுமார் 129 செ.மீ.நீளம் கொண்டது. மேலும், உலகிலேயே மிகப்பெரிய முயல் என கின்னஸ் உலக சாதனை அமைப்பு 2010-ல் அங்கீகாரம் வழங்கியுள்ளதாம்.
இந்த சிறப்பம்சம் கொண்ட முயலை திருடிய திருடனே ஒரு லட்சம் பரிசு தொகைக்கு கொண்டு வந்து விட்டுவிடுவார் என பலர் கூறிவருகின்றனர்.

மற்ற செய்திகள்
