'இப்படி கூட ஜாக்பாட் அடிக்கும்'... '10 வருசமாக ஹிட்லரின் கழிப்பறை சாவியை வைத்திருந்த நபர்'... கூரையை பீய்த்து கொண்டு வந்த அதிஷ்டம்!
முகப்பு > செய்திகள் > உலகம்76 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவி, ஒருவரின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் Berlin விடுவிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா விமானப்படை அதிகாரி ஒருவர், ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்தார். வில்லியம்ஸ் என்ற அந்த விமானப்படை அதிகாரி, அந்த சாவியை ஒரு நினைவுப் பொருளாகாக வைத்திருக்க முடிவு செய்துள்ளார். அதன் படி அது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் கடந்த 1945-ஆம் ஆண்டு ஹிட்லரின் சொந்த மேசையின் டிராயரில் இருந்து, அவர் பயன்படுத்தி வந்த சொந்த கழிப்பறை சாவியை எடுத்தேன், உலோகத்தால் இது ஆனது என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இது கடந்த 1980-90-களில் லண்டனில் இருக்கும் ஒரு சிறிய அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதைக் கண்ட அரியவகை பொருட்களை வாங்கி சேர்க்கும் நபர் ஒருவர் அந்த சாவியை வாங்கியுள்ளார். தற்போது அந்த சாவியை ஏலத்தில் விற்க முடிவு செய்தார். அதன்படி Ashford with C&T என்ற ஏல நிறுவனத்தில் அந்த சாவியை ஏலத்தில் விட்டுள்ளார். ஏதோ ஏலத்தில் விடலாம் என்ற நோக்கில், அதுவும் அந்த சாவி பவுண்டுகளை கூட தண்டுமா என்ற எண்ணத்தில் தான் ஏலத்தை நடத்தியுள்ளார்.
ஆனால் அவர் நினைத்து பார்த்ததுக்கு அப்படியே மாறாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சாவிக்கான ஆன்லைன் ஏலத்தில், இங்கிலாந்தை சேர்ந்த ஏலதாரர்கள் மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த சிலரும் இதை வாங்க போட்டி போட்டதால், இதன் ஏல விலை கடுமையாக உயர்ந்தது.
இது குறித்து Ashford with C&T நிபுணர் மத்தேயு ட்ரெட்வென் கூறுகையில், பிரித்தானியா மற்றும் ஜெர்மன் ஆன்லைன் ஏலதாரர்கள் இதை வாங்க கடுமையாக போட்டி போட்டதால், இதன் விலை இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டது. நாங்கள் கொடுத்த மதிப்பீட்டு தொகையை விட அது இவ்வளவுக்கு விற்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது, இதனால் நாங்களும் விற்பனையாளரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்'', என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே 300 பவுண்டுகள் மட்டுமே ஏலம் போகும் என எதிர்பார்த்த ஹிட்லரின் கழிவறை சாவி, சுமார் 14,000 பவுண்டுகளுக்கு ஏலம் போயுள்ளது.
