“அந்த பாட்டு முழுதும் சிகரெட் குறைஞ்சுட்டே வரும்.. ஆனா ஒரு பஃப் கூட இழுக்கல.. அது சிவாஜி டெக்னிக்.. ” - இளையராஜா
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 1952ல் பராசக்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து நடிப்பு என்பதற்கு தனி இலக்கணமாகவே திகழ்ந்து அழியா புகழ் பெற்றவர். இன்றும் சிவாஜி நடிப்புக்கு நிகர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடித்த சிவாஜி கணேசனின் மகன்களுள் ஒருவர் நடிகர் பிரபு, பிரபவின் மகன் விக்ரம் பிரபு.

Also Read | "இந்தியாவில் கால்பந்து உலக கோப்பை நடத்துற நாளும்".. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு!!
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, பிரபு, விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய இசைஞானி இளையராஜா, “சிவாஜி அண்ணாவின் தங்கப் பதுமை படம் போடி நாயக்கனூர் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தது. அதற்காக சிவாஜி அண்ணா வந்திருந்தார். அப்போது பண்ணைபுரத்தில் காந்திஜி தீண்டாமை ஒழிப்பு சங்கத்துக்கான டிராமா தியேட்டர் இருந்தது. சிவாஜி அண்ணா அங்கும் வருவதாக தகவல் பரவ, அப்போது பாஸ்கர் மைக் அரேஞ்ச் பண்ண வேண்டும் (இளையராஜாவின் சகோதரர்). நாங்கலாம் சின்ன பசங்க விளையாண்டுகொண்டிருந்தோம்.
அப்போது பாஸ்கர் மைக் அரேஞ்ச் பண்ணும்போது, சிவாஜி அண்ணா பாஸ்கரை எதேச்சையாக தொட்டுவிட்டார். அடுத்த 3 நாட்கள் பாஸ்கருக்கு ஜூரமே வந்துடுச்சு. அப்படி வியந்து நாங்கள் பார்த்த அண்ணா சிவாஜி கணேசன் அவர்கள், பின்னாட்களில் என்னுடன் படங்களில் பணிபுரியும்போது இதையெல்லாம் சொல்லும்போது நெகிழ்வார்.” என பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய இளையராஜா, “யார் அந்த நிலவு என்கிற பாடலில் சிகரெட் பிடிப்பது போல் நடித்திருப்பார். ஆனால் பாடல் முழுவதும அவருடைய சிகரெட் நீளம் குறைந்துகொண்டே வரும். அதேசமயம் சிவாஜி அண்ணா ஒரு பஃப் கூட சிகரெட் இழுக்கவில்லை. அசிஸ்டண்ட் டைரக்டர்கள் பார்க்க வேண்டிய கண்டினியூட்டியை கூட தானே பார்த்துக்கொண்டு, அப்படி ஒரு டெக்னிக்கை கையாண்டு பாடல் முழுவதும் சிகரெட் பிடிக்காமலேயே சிகரெட் பிடிப்பது போல் நடித்தார்” என குறிப்பிட்டார்.
Also Read | "மொத்த உலகமும் தேடுன விஷயம்".. திகைச்சு நின்ன Google.. 25 ஆண்டுகளில் இல்லாத டிராபிக் - சுந்தர் பிச்சை!!
