"காலைல சாப்பாடு ஆட்டுக்கறியோட இது தான்.. சைவம், காய்கறியே பிடிக்காது".. நடிகர் வேல. ராமமூர்த்தியின் டயட் பிளான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனக்கு பிடித்த காலை உணவுகள் குறித்து எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
Also Read | "ஒரு படத்தை இயக்க என்னோட சம்பளம் 'இவ்வளவு' தான்! வருமான வரி கட்றோம்ல".. மோகன் ஜி EXCLUSIVE தகவல்!
தமிழ் இலக்கிய சூழலில் பிரபல எழுத்தாளராக வலம் வருபவர் வேல. ராமமூர்த்தி. தமிழ் சினிமாவில் குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.
குறிப்பாக மதயானைகூட்டம், சேதுபதி, கிடாரி, கொம்பன், பாயும் புலி, வனமகன், அறம், அண்ணாத்த ஆகிய படங்கள் முக்கியமானவை.
கிடாரியில் இவர் செய்த கொம்பையா பாண்டியன் கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம் என்றால் மிகையாகாது. கமுதி பெருநாழியைச் சார்ந்த எழுத்தாளர் வேல. ராம மூர்த்தி. இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.
இவர் எழுதிய குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட தமிழ் நாவல்கள் புகழ்பெற்றவை. மேலும் இவர் எழுதிய சிறுகதைகளும் புகழ் பெற்றவை.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பிராண்மலை படத்தின் "இளந்தாரி பய" வசனம் இவரை ரசிகர்கள் டிரெணடாக்கி வருகிறது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை வேல. ராமமூர்த்தி அளித்துள்ளார்.
அதில் தனது காலை உணவு குறித்து எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி பேசினார். "உங்களுக்கு மிகவும் பிடித்த காலை உணவு டிபன் எது?" என்ற கேள்விக்கு"காலையில இட்லி & ஆட்டுக்கறி. முடிந்தால் உளுந்த வடையை தொட்டுட்டு திண்ணு பாருங்க. சினிமால சொல்ல வேண்டியதில்லை கோழி இருக்கும். ஆட்டுக்கறி இருக்கும். எல்லாமே இருக்கும். ஆனால் நான் தொட மாட்டேன். பிராய்லர் கோழியை தொடவே மாட்டேன். காய்கறியே பிடிக்காது, உருளைக்கிழங்கை நல்லா வறுத்து வச்சா நல்லா திண்பேன்" என வேல. ராமமூர்த்தி பதில் அளித்தார்.