“மொத்த குடும்பத்துக்கும் கொரோனா உறுதி ஆயிருக்கு.. அதே சமயம்!”.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களில் தொடங்கி அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வரை பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக தமிழகத்தில் 4 அமைச்சர் உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உயிரிழக்கவும் நேரிட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டிருக்கும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தனது குடும்பத்திற்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறார். கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பதிவில், தன் மாமனார், மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், அவர்களுடன் இருப்பவர்கள் என்கிற முறையில் தானும், தன் மனைவி கிருத்திகாவும், மகன் அரவிந்த மூன்று பேரும் கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் தன் மனைவி மற்றும் மகனுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும். இதனால் தன் குடும்பத்தினர் 4 பேரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்ததுடன் தான் ஒரு வெளிப்படையான நபர் என்றும், இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றும், தனக்கு கொரோனா இருப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தான் உண்மையில் நலமாகவே இருப்பதாகவும் தெரிவித்துளார்.

மற்ற செய்திகள்
