தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கடந்த 19 ஆம் நடைபெற்றிருந்தது.

மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும், 268 மையங்களில், காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு என்னும் பணியில், சுமார் இரண்டாயிரம் பேர் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில், தமிழகத்தின் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில், பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாநகராட்சியிலும், திமுக முன்னிலை வகிக்கிறது.
சென்னை மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் 21 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் முதல் 10 வார்டுகளில் 6 வார்டுகளில் அதிமுக-வும், 4 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளில், முதல் சுற்றில் எண்ணப்பட்ட 12 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாநகராட்சி முடிவுகள் அறிவித்த 8 வார்டுகளிலும் திமுக வெற்றி.
ஈரோடு மாநகராட்சியின் 6 வார்டுகளில், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில், மொத்தம் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 10-வது வார்டில் அதிமுகவும், 14 மற்றும் 2-வது வார்டுகளில், சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் முடிவு அறிவிக்கப்பட்ட 21 வார்டுகளில் திமுக 11, சிபிஎம் 2, காங் 2 விசிக1, மதிமுக 1 அதிமுக 4 இடங்களில் வெற்றி.
கும்பகோணம் மாநகராட்சியின், முதல் சுற்றில் எண்ணப்பட்ட 14 வார்டுகளில் திமுக 10 இடங்களையும், சுயேச்சை இரு இடங்களையும், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடங்களை கைப்பற்றியுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியின் தேர்தல் முடிவுகள் நிலவரம் - திமுக கூட்டணி 10 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
