"என்னோட கணவர் இப்போ உயிரோட இல்ல",,.. அவருக்கு பதிலா,.. கண்கலங்க வைக்கும் 'மனைவி'யின் 'செயல்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம்.

சண்முகம் கடந்த 24 ஆம் தேதியன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை மையத்தில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சண்முகம் உயிரிழந்தார். தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து பாதுகாப்பு உடையுடன் சண்முகத்தின் உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, சண்முகத்தின் மனைவி திலகவதி தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், கடமையை தவறாது செய்ய வேண்டும் என உணர்வோடு என் கணவர் இருந்தார் என தெரிவித்தார். மேலும், எனது கணவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் உங்களுக்கு சல்யூட் அடித்து இருப்பார். அவர் உயிருடன் இல்லாததால் அவருக்கு பதிலாக நான் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன் என கூறி திலகவதி, எஸ்.பி விஜயகுமாருக்கு சல்யூட் அடித்தார்.
அப்போது தாயைக் கட்டியணைத்துக் கொண்டு திலகவதியின் மகள் கண்ணீர் விட்டது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது. சண்முகத்தின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என எஸ்.பி. விஜயகுமார் உறுதியளித்தார். உயிரிழந்த சண்முகத்திற்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மற்ற செய்திகள்
